தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல், ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். நான் முதல்வன் திட்டத்துக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பாகவும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாகவும் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தபடவுள்ளது. முன்னதாக கடந்த 17ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியது. முதல் 3 செமஸ்டர்களுக்கு 5 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுள்ளன. இதில் முதற்கட்டமாக 2ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.