சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”அதிமுகவில் அடிமட்ட தொண்டன்கூட உயர்பதவிக்கு வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் அவைத்தலைவர். அவர், பொதுக்குழுவால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுக்குழுவில் அனைத்தும் சட்ட திருத்தத்தின் படி தான் அனைத்தும் நடைபெற்றது. யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை. அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழு தான். ஜூலை 11ஆம் தேதி கட்டாயம் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும். ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளிக்காமல், நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நாடுவதால் ஓ.பி.எஸ்க்கு மன உளைச்சல் அல்ல, தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல். ஓ.பி.எஸ். மீது தண்ணீர் பாட்டில் வீசியது, வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தெடர்ந்து, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தொண்டர்கள் கூச்சலிட வேண்டாம் என கூறிவந்தார். ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை. எந்த ஒரு மூன்றாவது நபரின் தலையீட்டையும் ஒருபோதும் அதிமுக ஏற்காது. தற்போதைய முதலமைச்சர் 7 ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்க ஒருவர் பிறக்கவே மாட்டார். அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்துவிடுவார்கள் என அவர் கூறினார்.