சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54வது நினைவுநாளை ஒட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அமைதிப் பேரணியாகச் சென்றனர்.
வாலாஜா சாலையில் தொடங்கிய இந்தப் பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி முன்னேறியது. பேரணியை ஒட்டி வாலாஜா சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பேரணியில் முதல்வருடன் திமுகவினர் பலரும் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.