நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர், காவலர்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், அவர் தனது உரையில், புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.