சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அங்கு, அவருக்கு முதுகுவலி காரணமாக வழக்கமாக நடைபெறும் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் வீடு திரும்பினார். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நாளை நடக்கவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, நீண்ட பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இருந்த முதலமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.