சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதில், சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2ஆவது பசுமை விமான நிலையம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது, வர இருக்கும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாநில கல்வி கொள்கை, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் போன்றவை ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.