மதுரை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அண்ணா மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் லோகோவை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் தூய்மைப்பணியாளர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தார். மதுரை ஆரப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் களப்பணி குழுவினரின் பணிகளை காணொலி காட்சி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மற்ற அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.