சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள நல திட்டங்களின் நிலை, செயல்பாடுகள், வர இருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்க்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.