செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஒலிம்பியாட் ஜோதி 40 நாட்களில் 73 நகரங்களை சுற்றி இன்று 74ஆவது நகரமாக மாமல்லபுரம் வந்தடைந்தது. இதையொட்டி, மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் உற்சாக வரவேற்று அளித்தனர். அப்போது அமைச்சர் மெய்யநாதன், ”டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ஒலிம்பியாட் ஜோதியை இன்று மாலை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று கொள்கிறார். பின்னர்,சென்னையில் வலம் வரும் ஜோதி, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார்.