மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் போக்குவரத்து விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக அரசு அமல்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராத தொகை வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்த இந்த புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிமுறை மீறிய 2,500 வாகன ஓட்டிகள் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நேற்று ஒரேநாளில் ரூ.15 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.