சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் மாதம் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை தமிழ்நாடு அரசும், WTA-ம் இணைந்து நடத்துகிறது. இந்த நிலையில், சர்வதேச டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
போட்டி நடைபெறும் செப்டம்பர் 12 முதல் 18ஆம் தேதி வரை 7 நாட்களுக்கும் சீசன் டிக்கெட்கள் – ரூ.1000/ரூ.2000/ரூ.3000
12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான நாட்களுக்கான தினசரி டிக்கெட் கட்டணம் – ரூ.100/ரூ.200/ரூ.300
கடைசி 3 நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் – ரூ.200/ரூ.400/ரூ.600
விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் மற்றும் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய chennaiopenwta.in என்ற இணையதளத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.