சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழக அரசும் டபிள்யூடிஏ-யும் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இணையத்தில் தொடங்குகிறது. அதன்படி, chennaiopenwta.in என்ற இணையதளத்தில் இருந்து டென்னிஸ் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.