சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், போலந்து நாட்டைச் சேர்ந்த மேக்டா லினெட், செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லிண்டா ஃப்ரூவிர்டோவாவும் மோதினர். இதில், முதல் செட்டை 6-4 என லினெட்டும், இரண்டாவது செட்டை 6-3 என லிண்டாவும் கைப்பற்றியனர். இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தை 6-4 என்ற கணக்கில் லிண்டா கைப்பற்றினார். இதன் மூலம், 17 வயதான செக் குடியரசை சேர்ந்த லிண்டா சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் 2022 WTA 250 சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் WTA 280 புள்ளிகள், கேடயம் மற்றும் 26 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை வென்றார்.