அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் இன்று திங்கட்கிழமை (ஜூலை 11ஆம் தேதி) பொதுக்குழு கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளதால், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய ஓபிஎஸ் தரப்பு மனுவை நிராகரித்ததுடன், கட்சி விதிகளுக்கு உட்பட்டு அதிமுக பொதுக்குழு நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழங்கினார். மேலும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என கடந்த 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.