தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை ஆண்டுதோறும் தமிழக காவல்துறை விதித்து வருகிறது. அதன்படி, சென்னையில், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.