செங்கல்பட்டு அருகே சூனாம்பேடு கிராமம் ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்த முரளியின் மனைவி புஷ்பா. கர்பவதியான அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே இல்லிடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் வீடியோ கால் மூலம் செவிலியர்களுக்கு மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் படி, பிரசவம் பார்த்துள்ளதாக தெரிகிறது. அப்போது, குழந்தையின் தலை மட்டும் வெளியே வராததால் ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.