அமெரிக்க விண்வெளி மையமான நாசா, வெளியிட்டுள்ள தகவலின் படி நிலாவில் ஆண்கள் இறங்கி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணை இறங்க வைப்பதாகவும் அந்தத் திட்டத்துக்கு ‘ஆர்டெமிஸ்’ என்கிற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரையும் சூட்டியுள்ளனர். ஆர்டெமிஸ் 1 விண்கலம் கடந்த நவம்பர் 16 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
‘கோ ஃபார் லாஞ்ச்…’ என்கிற பெண் குரலை, கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் உள்ள ஃபயரிங் அறையும் அங்கு கூடியிருந்தவர்களும் முதல் முறை கேட்டனர். நாசாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் ‘ஏவுகணை இயக்குநர்’ ஆக (லாஞ்ச் டைரக்டர்) நியமிக்கப்பட்டிருக்கிறார்.இதன் இயக்குநராக சார்லி ப்ளாக்வெல் தாம்சன் தனது பணியை சிறப்பாக செய்து, ஆர்டெமிஸ் 1 ஏவுகணை வெற்றிகரமான விண்ணில் பாய்ந்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கும் காரணம், நம் அனைவரின் உழைப்பும்தான்! நம் உழைப்பு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.