கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் மையங்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஒரு நபர் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்தனைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நிலையில், இந்த கட்டணம் மேலும் கூடுதலாக ரூ.1 அதிகரித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறையினால், இதுவரை மாதந்தோரும் ஐந்து பரிவர்தனைக்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் ரூ.20 வசூலிக்கப்பட்ட நிலையில் இனி ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் கட்டணமாக ரூ.21 வசூலிக்கப்படும். கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்கள் தவிர பிற ஏடிஎம்களில் மாதத்தில் மூன்று முறை கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.