day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதியில் மாற்றம் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதியில் மாற்றம் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:- “12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்பாக வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!