சென்னை: குமரிக்கடல் பகுதிகளில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அந்த நாட்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2, 3-ந் தேதிகளில் வறண்ட வானிலை காணப்படும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை (மார்ச் 4) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.