சென்னை : தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானதுமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.