சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் . மேலும்,தென் தமிழகம் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை , நாளை மறுநாள் தென் தமிழகம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.