சென்னை: தென் இந்திய மாநிலங்களில் நிலவும் வளிமண்ட கீழக்குதிசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திப்பதன் காரணமாக மழைக்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்து நீடித்துவருவருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் கானப்படும் . மேலும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.