கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சூழற்சியின் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தொிவித்துள்ளது.
இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 15-ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தொிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தொிவித்துள்ளது.