சென்னை: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.மேலும், ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது .
குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.