இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால், இந்தியா முழுவதும் இதுவரை 4,31,68,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று வரை 21,177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, நேற்று மட்டும் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,651ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்குள் இருந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்தியா முழுவதும் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. இருந்தபோதிலும், கேரளா மற்றும் மராட்டிய மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். அதில், கொரோனா பாதிப்பு குறித்த கண்காணிப்பை மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் முறையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.