இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் பாலசரவணன் அவரது ட்விட்டர் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள் இன்று முதல் சங்க உறுப்பினர் ஆகிறான்.. வாழ்த்துகள் நண்பா என்று ஜஸ்டின் பிரபாகரனை டாக் செய்து வாழ்க வளமுடன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜஸ்டின் பிரபாகரனுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஜஸ்டின் பிரபாகரன் ஆரஞ்சு மிட்டாய், ஒருநாள் கூத்து, உள்குத்து, ராஜா மந்திரி, காலக்கூத்து போன்ற தமிழ் திரைப்படங்களுடன், குஞ்சிராமாயணம், டியர் காம்ரேட், ராதே ஷ்யாம் போன்ற மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.