இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் கட்ட தேர்வுகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இந்தாண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் கட்ட தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு மதிப்பெண்களை இணைத்து இந்தமாத இறுதிக்குள் வெளியிட சி.பி.எஸ்.சி., தரப்பு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு யூ.ஜி.சி.,க்கு சி.பி.எஸ்.சி., கடிதம் எழுதியுள்ளது. அதில், சி.பி.எஸ்.சி., 12ஆம் வகுப்பு முடிவுகள் வெளியான பின்னரே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.