சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் டெல்லியில் இருந்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சீனர்களுக்கு விசா வாங்கி தருவதில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த மே மாதம் 17ஆம் தேதி ப.சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று மீண்டும் சோதனை செய்து வருகின்றனர்.