பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடந்த மாநாடு ஒன்றில் பேசியுள்ள அந்த நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார நெருக்கடியை ஒரளவு சமாளித்தோம். ஆனாலும் பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. பொருளாதாரத்தில் சிறிய நாடுகள் கூட எங்களை விஞ்சி விட்டன. எனினும், நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகிறோம். நாங்கள் எந்த நட்பு நாட்டுக்கு சென்றாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ கூட எங்களை பணம் கேட்டு பிச்சை எடுப்பவர்கள் போல பார்க்கிறார்கள் என்று அவர் பேசியுள்ளார். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றதும் நாட்டின் பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய மற்றும் மருந்துப்பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகளுடன் கடந்த சில மாதங்களாக கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளமும் அந்த நாட்டை பெரிதும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.