மியாமி நகரில் க்ரிப்டோ செஸ் தொடரில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை, தமிழக வீரர் பிரக்யானந்தா தோற்கடித்தார். இதையடுத்து, அவரை தனது டுவிட்டர் பக்கத்தில் மேக்னஸ் பாராட்டியுள்ளார். அதேவேளையில், தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றுமொறு சுவாரசியமான பதிவை பதிவிட்டுள்ளார். அதில், அபி அண்ட் நியூ என்ற டுவிட்டர் கணக்கர் ஒருவர் ‘செஸ் தான் புதிய கிரிக்கெட். இது தவறு என நிரூபியுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இதை ரிடுவிட் செய்து பதில் அளித்துள்ள கார்ல்சன் ‘செஸ், கிரிக்கெட்டல்ல என்பதற்கு நான்கு காரணங்கள்.
கிரிக்கெட் ஆடுகளத்தில் மனிதர்களால் விளையாடப்படுவது. செஸ், பலகையினால் மரத்தாலான காய்களால் விளையாடப்படுவது.
கிரிக்கெட் விளையாட்டில் பேட், பந்து உள்ளன. செஸ்ஸில் அவை கிடையாது.
கிரிக்கெட் ஆட்டத்துக்கு 22 வீரர்கள் தேவைப்படுவார்கள். செஸ்ஸில் இரண்டு பேர் தான்.
என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் அண்மையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இந்தியாவில் செஸ் மீது மோகம் அதிகரித்திருப்பதையே இதுபோன்ற பதிவுகள் உணர்த்துகின்றன.