கனடா நாட்டின் சாஸ்கட்சிவான் மத்திய மாகாணத்தில் 13 இடங்களில் தொடர்ச்சியாக நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக குற்றச் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். இதையடுத்து, தொடர் தாகுதல் குறித்து கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ”சாஸ்கட்சிவான்-ல் நடந்த தாக்குதல் பயங்கரமானதும் இதயத்தை உடைக்கக்கக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடந்தவர்களுக்கும்” தனது ஆறுதலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.