தேசிய சினிமா தினம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரூ.75 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிப்பை அந்த சங்கம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்தியா முழுவதிலும் உள்ள PVR, INOX, Cinepolis போன்ற சுமார் 4,000 மல்டிபிளக்ஸ் ஸ்க்ரீன்களில் டிக்கெட் கட்டணமாக ரூ.75 ரூபாய் மட்டும் செலுத்தி சினிமா ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்கலாம்.