கம்போடியா நாட்டில் ராட்சத stingray எனப்படும் உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் 661 பவுண்டு எடை உடையதாகும். அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் பாயும் Mekong ஆற்றில் இந்த மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் சிக்கி இருந்த இந்த மீனை மீன் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு தாய்லாந்தில் கடந்த 2005ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட மீன் 646 பவுண்டு எடை கொண்டதாக இருந்த குறிப்பிடத்தக்கது.