சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழகத்தின் அனைத்துத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஓய்வுப்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணைய அறிக்கை, வர இருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது, தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சரவையில் முக்கிய ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சரவைக் கூட்டம் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், ஆலோசனைக்கூட்டத்தில் பகிரப்பட்ட தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.