ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்பட்டு , வேட்பு மனுக்களை வருகிற 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.