மாண்டஸ் புயலால் இன்று இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று புயல் கரையை கடக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இசிஆர் சாலை வழியாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.