ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகே துலுக்கனூர் புறவழிச் சாலையில் ஆம்னி கார் மீது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணித்த ஒரு குழந்தை, ஒரு ஆண், 4 பெண்கள் என 7 பேர் பலியாகினர். மேலும் ஆம்னி காரில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.