செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியனின் மகள் கிருத்திகா(12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இ்ந்நிலையில், பள்ளி விடுமுறையில் அவுரி மேடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த கிரித்திகா மின்கம்பம் உடைந்து விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடல் சித்திரவாடி பகுதியில் உள்ள மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் சூரிய கிரகணத்தன்று, மயானத்தில் பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருந்ததால், அச்சமுற்ற அந்த பகுதி மக்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர். இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், சிறுமி புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் தோண்டி உடலை வெளியே எடுத்தபோது உடலில் தலை வெட்டப்பட்டு இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.