தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பும்ரா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி, டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சியுள்ள 2 போட்டிக்கு இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ரா, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.