இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்தார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், பும்ரா காயம் காரணமாக டி20 தொடர் உலகக் கோப்பையிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை, உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.