புதுச்சேரில் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், 2022-23ஆம் ஆண்டிற்கான ரூ.10,670 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் என்.ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, சட்டப்பேரவையில், தலைவர் ஆர்.செல்வம் மற்றும் அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, எதிர்க்கட்சி தரப்பினர் திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தாண்டு முதல் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப், எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு வழங்கப்படும் தொகை ரூ.2 கோடியாக உயர்வு, காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி, ரூ.80 கோடி செலவில் புதிய அரசு மருத்துவமனை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 என பல முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.