தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் சிறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் போண்டா மணி. சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம் ஆகிய படங்களின் மூலம் பெரிதும் அறியப்பட்டார். இவருக்கு அண்மையில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து, போண்டா மணி தனக்கு உதவிகள் கிடைத்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் அளித்துள்ளார். நடிகர் வடிவேலுவும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு சார்பில் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். நான் சம்பாதித்தது இதுதான். அனைவருக்கும் நன்றி” என அந்த வீடியோ பதிவில் உருக்கமாக பேசியுள்ளார்.