பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ (6e2126) விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்யும் பயணியின் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதோடு, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, விமானம் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டு பின்னர் சென்றுள்ளது.