சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு துபாய் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபரின் தொலைப்பேசி வழி வந்த மிரட்டலுக்கு பிறகு விமானத்தின் புறப்பாடு தாமதமானது. 167 பயணிகள் பயணிக்கவிருந்த இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டர்.