பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாதிகாபாத் நகரின் மச்கா பகுதிக்கு அருகே இன்தோஸ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்தது. மச்காவில் உள்ள ஹுசைன் பகாஷ் சோலங்கி கிராமத்திற்கு திருமணத்துக்கு சென்று திரும்பியவர்கள் 100 பேர் வரை இந்த படகில் பயணித்துள்ளனர். இதில், இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்த 19 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான மக்கள் படகில் ஏற்றியதும், நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே படகு கவிழ்ந்ததற்கு முக்கிய காரணம் என்று உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.