விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்துள்ள பனையூரில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக்கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக “தளபதி விஜய் குருதியகம்” என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.