சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் தமிழர்கள் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை அதை எங்கள் மீது தினித்தார்கள் என்றார். மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழக அரசு முழுவதுமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். பிஜேபி-திமுக கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூற முடியாது, அதை மோடி தான் கூற வேண்டும் என்றார். இனி புதிதாக பாஜக-திமுக கூட்டணி அமைக்கவே தேவையில்லை கூட்டணி அமைக்காமலேயே தமிழகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது என்று கூறினார். மேலும், அதிமுகவில் ஈடுபட்ட பிளவு காரணமாக பாஜக தன்னை எதிர்க்கட்சியாக காட்டிக் கொள்கிறது. ஆனால் பிஜேபி எதிர்க்கட்சி கிடையாது என்றார்.