தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதைக் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்கிறது திமுக அரசு” என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் போதையால் நிகழ்ந்த சம்பவங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
#pengalinkural #பெண்களின்குரல்