புதுடெல்லி: நாடு முழுவதும் போலி தங்க விற்பனையை தடுக்க பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரையை வெளியிட்டு உள்ளது. இனி நகை கடைகளில் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைள் விற்க கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் தங்க விற்பனை அதிகம் நடக்கும் 339 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளே விற்பனை செய்ய வேண்டும்.